இந்த உலகத்தில் முன்பெல்லாம் புற்றுநோய் என்பது எங்கோ ஒரு இடத்தில் கேள்விப்பட்டது போல் இருக்கும் ஆனால் இந்த நவீன(?) உலகத்தில் புற்றுநோய் என்பது காய்ச்சல் சளி போன்று வந்துவிட்டது. சிறிய காரணங்கள் போதும் புற்று நோய் தாக்குவதற்கு உடனே வந்து விடுகின்றது. அதுவும் முன்னால் எல்லாம் கழுத்துப்பகுதியில் புற்றுநோய் வரும். இப்போது கற்பப்பை, வயிறு, இரத்தம், மூளை ஏன் கண்களில் கூட இப்போது வந்து விட்டது.
இந்த கண் புற்று நோயைப்பற்றி விரிவாகக் காண்போம். கண் புற்று நோய் என்பத கண்களில் புரை வளர்வதைப்போல் வளரும். அது பின்னர் வளர்ந்து புற்று நோய் ஆகிவிடும்.
இன்றைய நிலையில் எங்குவேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம் என்று இருக்கின்றது அந்தவகையில் குழந்தைகளையே அதிகமாக பாதிக்கும் இந்த கண் புற்றுநோய் பற்றி ஒவ்வொரு பெற்றோரும் கிழே உள்ள அறிகுறிகள் மூலம் அறியக் கூடியதாக இருக்கும்.
கண்களில் புற்றுநோய்க்கான அறிகுறிகள்
கண்களில் புற்று நோய் வந்துவிட்டால் முதலில் கருவிழியில் வெள்ளைப்படலம் தோன்றும்
விளக்கொளிப்பட்டால் மிருகங்களின் கண்கள் போல ஒளிரும் அவ்வாறு நோய் தாக்கப்பட்டவரின் கண்களும் ஒளிரும். நல்லாக இருந்த அவரது கண்கள் மாறுகண்களாக மாறும். பார்வையில் பல வண்ணங்கள் மற்றும் நிறமாலை தோன்றும் சில சமயம் நிறக்குருடு கூட தோன்றும். ஆரம்ப நிலையிலேயே கவனிக்காமல் விடும் பட்சத்தில் நாளாக நாளாக பார்வை இழக்க நேரிடும்.
விளைவுகள்
முதலில் இந்நோய் ஏற்பட்டவுடன் சாதரண கண்கட்டிப்போன்றுதான் இருக்கும் நாளாக நாளாக வலி மற்றும் அதிக கண்ணீர் வெளிவந்து கொண்டேயிருக்கும் பின்னர் அதுவாக வளர்ந்து கண்களை மூடிக்கொள்ளும்.
புற்றுநோய் வளர்ந்து மற்ற உறுப்புகளையும் பாதிக்கும்.
குணப்படுத்தும் முறைகள்
குணப்படுத்துவதற்கு லேசர் அறுவை சிகிச்சை செய்யும்முறையில் மெதுவாக கண் புற்று நோயை குணப்படுத்தலாம். கண்களுக்கு மேல் சின்ன வட்டமான பிளேட் வைத்து அதன் வழியாக கண்களுக்கு லேசர் கதிர்களை செலுத்தும் முறைக்கு பிராகி தெரபி. இந்த முறையை பயன்படுத்திக் குணப்படுத்தலாம்.
பெரியவர்களுக்கும் கண்புற்று நோய் வர வாய்ப்புள்ளது தினமும் கண்களை கழுவ வேண்டும். கண்களை அடிக்கடி தேய்க்ககூடாது. தினமும் கண்களுக்கு 8 மணிநேரம் ஓய்வு கொடுக்க வேண்டும் கண்களில் நோய் ஏற்பட்டால் உடனே மருத்தவரிடம் காண்பிக்கவேண்டும்.