நாட்டின் அனர்த்த முகாமைத்துவத் துறையை உலகளாவிய தரத்திற்கு ஏற்ப அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு படையணியின் உயர்மட்ட தூதுக்குழுவுடன் நேற்று (18.05.2023) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பேரிடர் முகாமைத்துவ நிலையம் அமைப்பு
மேலும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அனர்த்த முகாமைத்துவ மையத்தை அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
உலகளாவிய தரத்திற்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவத்துறையை அபிவிருத்தி செய்ய விரும்புவதாகவும், பேரிடர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஆதரவளிக்கும் உலகளாவிய பதிலளிப்பாளராக பேரிடர் முகாமைத்துவ நிலையத்தை உருவாக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.