Loading...
ஜூன் மாதத்தில் புதிதாக 7,800 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
Loading...
கல்வியியல் கல்லூரிகளில் சித்தியடைந்த 7800 பேருக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான முதல் படியாக இந்த நியமனங்கள் அமையும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...