Loading...
14 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீ ஜயவர்த்தனபுர இராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூபியில் இராணுவ நினைவு நிகழ்வு நடைபெறவுள்ளது.
Loading...
30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் போது, தாய்நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்காக அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட முப்படையினர், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இங்கு நினைவு கூரப்படவுள்ளனர்.
இந்த நிகழ்வில், பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்கட்சித்தலைவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், முப்படையினர் மற்றும் உயிரிந்த இராணுவ வீரர்களின் உறவினர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
Loading...