எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பில் வழக்குப் பதிவதில் தாமதமேற்படுத்த இலஞ்சம் வழங்கப்பட்டமை குறித்து சீ.ஐ.டி.விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகி இயற்கைச் சூழலுக்கு பாரிய தீங்கை விளைவித்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்கான இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு வழக்குப் பதிவு செய்ய நீண்டகாலம் எடுத்திருந்தது.
சீ.ஐ.டி.விசாரணைகள்
இந்நிலையில் இழப்பீடு தொடர்பான வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுத்த இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு 250 மில்லியன் டொலர்கள் இலஞ்சமாக வழங்கப்பட்டதாக பரபரப்புத் தகவல் ஒன்று வெளியாகியிருந்தது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக சீ.ஐ.டி.விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதுகுறித்து குற்றப்புலனாய்வு திணைக்கள பொலிஸார் நேற்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
அதனையடுத்து விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் திலிண கமகே பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.