கம்பஹா மாவட்டத்தின் முன்னாள் அமைச்சரை ஏமாற்றிய நபர் (55) இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து தனக்கு கிடைத்த பணம் மத்திய வங்கியினால் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த பணத்தை விடுவித்துக் கொள்வதற்கு பல நபர்களிடம் கோடி கணக்கில் பணம் கொள்ளையடித்த குற்றச்சாட்டிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் முன்னாள் அமைச்சரிடம், 10.4 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நாடு முழுவதும் இவ்வாறு பண மோசடியில் ஈடுப்பட்டு வந்துள்ளதாகவும் பொலிஸாருக்கு 15 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் 80 மில்லியனுக்கு அதிகமான பணத்தை இவ்வாறு மோசடி செய்துள்ளார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.