தமிழகத்தில் உள்ள இலங்கையர் ஒருவருக்கு 22 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மண்டபத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இத் தீர்பபைபை ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம்
வழக்கின் படி, கடந்த 2022 ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 52 வயதான குறித்த இலங்கையர், 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துன் கொண்ட ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் 22 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.
இதேவேளைப் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் இழப்பீடு வழங்கத் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.