பூமியின் ஈர்ப்பு விசையின் மிக குறைந்த புள்ளி இலங்கையின் தெற்குப் பகுதியில் காணப்படுவதாக அமெரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
“கிரேஸ் மிஷன்” என்று அழைக்கப்படும் நாசாவின் புவியீர்ப்பு மீட்பு மற்றும் காலநிலை பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அத்துடன், ஹட்சன் விரிகுடா பகுதியைச் சுற்றியுள்ள வட கனடாவும் குறைந்த ஈர்ப்பு விசை கொண்ட பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், இந்தியப் பெருங்கடலில் மாலைத்தீவுக்கு கிழக்கே உள்ள பிராந்தியத்தில், வடக்கு கனடாவில் உள்ள ஹட்சன் லகூன் அருகே மிகக் குறைந்த புவியீர்ப்பு விசை காணப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் வெளியான தகவல்
நியூசிலாந்தில் 68 கிலோ எடையுள்ள ஒரு பயணி, மாலைதீவு அல்லது கனடாவின் ஹட்சன் விரிகுடாவில் இருக்கும்போது 3 கிராம் வரை எடையை இழக்க நேரிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பூமியின் மேலோட்டத்தின் தடிமன் மற்றும் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள உருகிய பாறை மற்றும் மக்மாவின் அளவு ஆகியவற்றில் வேறுபாடு இருப்பதால், அவை ஈர்ப்பு விசைகளில் மாறுதல்களை உண்டாக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கை வரும் சில சுற்றுலாப் பயணிகள், தங்களின் எடையில் வித்தியாசம் இருப்பதாகவும் உணர்கின்றனர்.