Loading...
வவுனியாவில் பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனை கடுமையாக தாக்கி அதனை காணொளியாக பதிவுசெய்த சக மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் (18.05.2023) ஆம் திகதி பதிவாகியுள்ளது.
வவுனியா பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்குழு ஒன்று வவுனியா வைரவ புளியங்குளம் வீதியில் சக மாணவனை சரமாரியாக தாக்கி அதனை காணொளியாக பதிவு செய்து டிக்டொக் செயலியில் பதிவு செய்துள்ளனர்.
Loading...
இருவர் கைது
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மாணவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...