- இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, தென்கொரியாவை சந்திக்கிறது.
- சூட்-அவுட்டில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்தது.
உலகக் கோப்பை வில்வித்தை 2ம் நிலைக்கான போட்டி சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் ஓஜாஸ் டீடேல்-ஜோதி சுரேகா வென்னம் ஜோடி, இத்தாலியின் எலிசா ரோனிர்-எலியா பிரிக்னென் இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 157-157 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து நடந்த சூட்-அவுட்டில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்தது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, தென்கொரியாவை சந்திக்கிறது.
ரிகர்வ் கலப்பு அணிகள் பிரிவில் 2-வது சுற்றில் நேரடியாக களம் கண்ட இந்தியாவின் திரஜ் பொம்மதேவரா-சிம்ரன்ஜீத் கவுர் ஜோடி 2-6 என்ற கணக்கில் இந்தோனேஷியா இணையிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தது.