Loading...
மலையக மக்களின் உரிமைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று அமைதியான முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் பூர்த்தி செய்த நிலையில் தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
Loading...
இதன்போது பல்வேறு கோரிக்கைகளை ஏந்திய பதாகைகளை தாங்கியவாறு போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டனர்.
“மலையக மக்கள் சுதந்திரமாக வாழ காணி வழங்கு”, “மலையக மக்களை சிதைக்க வேண்டாம்”, “பதவிகளுக்கு மலையக மக்களை விற்காதே” போன்ற பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் நடைபெற்றது.
Loading...