Loading...
புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசறை – பிபில வீதி, 13ஆம் கட்டைப் பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Loading...
ஆயுத களஞ்சியசாலை
கொழும்பு – ஹோமாகம பகுதியைச் சேர்ந்த பூசாரியான 60 வயதுடைய பெண்ணொருவரும், 30 மற்றும் 40 வயதுடைய ஆண்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் உட்படப் பூசைப் பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில் ஆயுத களஞ்சியசாலை இருந்தது என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த முன்னோர்கள் கூறி வந்துள்ளனர் என்று பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
Loading...