பிரித்தானியாவில் வீசிவரும் கடும் புயல் மற்றும் மழையினால் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மணிக்கு 90 மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசி வருவதால் சில விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் போக்குவரத்து தாமதங்களை எதிர்நோக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எயர் லிங்கஸ் விமானச்சேவை பிரித்தானியாவிற்கும் அயர்லாந்திற்கும் இடையிலான 12 விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. இதேவேளை, பயணங்களை மேற்கொள்ளும் முன்னர் விமானச் சேவைகளை முன்கூட்டியே உறுதி செய்துக் கொள்ளுமாறு ஹீத்ரு விமானச் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன், அயர்லாந்தை பெரிதும் தாக்கிவரும் டொரிஸ் புயலின் எதிரொலியாக சுமார் 46 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.