திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானையின் தாக்குதலினால் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த வனர்த்தம் இன்றைய தினம் (23.05.2023) அதிகாலை இடம் பெற்றுள்ளது.
வீட்டில் இருந்து வயலுக்குச் சென்று கொண்டிருந்த போது யானை தாக்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கோமரங்கடவல – அடம்பன பகுதியைச் சேர்ந்த அக்குறாலகே செனவிரத்ன (65வயது) எனவும் தெரிய வருகின்றது.
யானையின் தொல்லை அதிகரிப்பு
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்குள் நான்கு பேர் யானையின் தாக்குதலினால் குறித்த பிரதேசத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், திருகோணமலை-கோமரங்கடவல பகுதியில் காட்டு யானையின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.