Loading...
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன், இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான இயக்குநர் பென் மெலோர் ஆகியோர் விஜயம் செய்துள்ளனர்.
Loading...
இதன்போது சமகால விவகாரங்கள், பிரித்தானியாவுக்கும், யாழ்.பல்கலைக் கழகத்துக்கும் இடையிலான கல்வி சார் உடன்படிக்கைகள் பற்றிக் கேட்டறிந்த பிரித்தானியத் தூதுவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படும் சமுதாயச் சமையலறைக்கு சென்றும் பார்வையிட்டுள்ளார்.
இதன்போது யாழ் ,பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பதிவாளர் வி. காண்டீபன் ஆகியோரையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...