Loading...
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களாக தனது சொத்து தொடர்பான விபரங்களை மறைத்த ரோஹித்தஅபேகுணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில் குறித்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி நிஸங்க பந்துல குணரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே நீதிபதி இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
Loading...
இதற்கிணங்க, அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரோஹித்த அபேகுணவர்தன நாட்டை விட்டுச் செல்வதற்கு ஒரு கிழமைக்கு முன்னர் அவரது கடவுச் சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என இதன் போது நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Loading...