காதல் என்பது என்றுமே ஓர் அழகான உணர்வு. காதலில் நிச்சயம் கருத்து வேறுபாடுகள், சண்டைகள் என்பன ஏற்படும். ஆனால், அவற்றை எவ்வாறு கடந்து செல்கிறோம் என்பதில்தான் அனைத்தும் உள்ளடங்கியிருக்கின்றது.
காதலில் என்னதான் சண்டைகள் வந்தாலும் அவற்றை சமாளிக்கத் தெரிய வேண்டும். அதுவே பக்குவப்பட்ட ஒரு காதலுக்கான அறிகுறியாகும். சரி இனி பக்குவமான காதலுக்கான அறிகுறிகள் எவையென பார்ப்போம்.
தேவைகளை பூர்த்தி செய்தல் – நிச்சயமாக காதல் உறவில் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். அவற்றை இருவருமே ஒருவருக்காக இன்னொருவர் பூர்த்தி செய்யவேண்டும்.
நேரடியாகப் பேசுவது – ஒருவருக்கொருவர் நேரடியாகப் பேசிக்கொள்ள வேண்டும். இதுவே பக்குவப்பட்ட காதலுக்கான சிறந்த அடையாளம்.
மோதல்களில் இணைந்திருத்தல் – மோதல்களின்போதும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருக்க வேண்டும். இது இருவருக்குள்ளும் இன்னும் புரிதலை அதிகரிக்கும்.
மன்னித்தல் – தவறு செய்வது மனித இயல்பு. அப்படி இருக்கும்போது தவறு செய்து அதை உணர்ந்து திருந்தி வரும்போது மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஸ்பேஸ் – நமது துணையின் இலட்சியங்கள், கனவுகள் என்பவற்றுக்கு இடம் கொடுக்க வேண்டும்.
விளையாடுதல் – மகிழ்ச்சியாக விளையாடுதல், வேடிக்கையாக நடந்து கொள்ளுதல் என்பன பக்குவப்பட்ட காதலில் மிக முக்கியமானதாகும்.