பொதுவாக சாப்பிடும் போது பழங்கள் மற்றும் ஜீஸ் வகைகள் வைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு இருக்கும் போது சாப்பிடும் போது பழங்களையும் சேர்த்து கொள்ளலாமா? அல்லது சாப்பிட்ட பின்னர் தான் பழங்கள் சாப்பிட வேண்டுமா என சந்தேகம் வரும்.
அந்த வகையில் பழங்கள் சாப்பிடுவதால் சருமம், இரத்தயோட்டம், நோய்கள் நிவாரணம் என பல வேலைகள் நமது உடலில் ஏற்படுகின்றது.
பழங்களில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் தலைமுடி துவக்கம், நகம் வரையிலான அனைத்து வளர்ச்சிகளுக்கும் வழிவகுக்கின்றது.
இதனால் பழங்கள் சாப்பிடும் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
பழங்கள் சாப்பிடலாமா?
நாம் பழங்களை சாப்பிடும் போது சாப்பிடக் கூடாது. சாப்பிட்டு முடித்த பின்னர் தான் சாப்பிட வேண்டும் என எமது முன்னோர்கள் கூறி கேள்விபட்டிருப்போம்.
இததையும் தாண்டி காய்கறிகள், பால் பொருள்கள், தானியங்கள், அரிசி, இறைச்சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது பழங்கள் சாப்பிடக் கூடாது எனவும் சில நம்பிக்கைகள் இருக்கின்றன.
அவர்களிடம் ஏன் என கேள்வியெழுப்பும் போது, பழங்கள் மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என முன்னோர்கள் நம்புகிறார்கள். இது உண்மையா? என நாம் தொடர்ந்து பார்க்கலாம்.
பழங்கள் எப்போது தான் சாப்பிட வேண்டும்?
பொதுவாக நாம் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இருப்போம். அப்போது நாம் பழங்களை எடுத்து கொள்ளலாம்.
இது செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை மேம்படுத்த உதவுகின்றது. அமில உணவுகள் சாப்பிட்டு இருந்தால் நாம் பழங்கள் சாப்பிடுவதை தடுக்க வேண்டும். இது நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
பழங்கள் சாப்பிட்ட பின்னர் கொழுப்புகள் இல்லாத உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இது ஒரு வகை டயட் போன்றது.
காலையில் பழங்கள் சாப்பிடுவதால் அது வேகமாக செரிமானத்திற்கு உள்ளாகும். இது இயற்கையான சர்க்கரையை உடலுக்கு வழங்குகின்றது.