வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகக் குறுக்கு வழிகளில் முயற்சிக்க வேண்டாம் என்று அமைச்சர் மனூஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய தினம் (24.05.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இ்வ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக பெரும்பாலானவர்கள் குறுக்கு வழியில் இஸ்ரேல், கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
குறுக்கு வழியில் முயற்சிகள்
ஒருசிலர் அவ்வாறான குறுக்கு வழிகளில் அந்த நாடுகளுக்குச் சென்று சிக்கல்களை எதிர்கொண்டு, வேலையும் இன்றி, திரும்பி வரவும் வழியின்றி தவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் அமைச்சின் ஊடாக உரிய முறையில், காத்திருப்பு பட்டியலின் அடிப்படையில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுச் செல்வதே பாதுகாப்பான வழியாகும் என்றும் அதில் குறுக்கு வழியில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனூஷ நாணயக்கார தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.