சுவீடனில் மக்கள் தங்கள் துணையுடன் உறவுக்கொள்வதற்காக பணிநேரத்திலிருந்து ஒரு மணிநேரம் விடுப்பு அளிக்கும் சட்டம் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.
ஓவர்டோனியா நகரசபை உறுப்பினர் எரிக் முஸ்கோஸ் என்பவரே இப்படியான சட்டமூலத்துக்கான பிரேரணையை சமர்பித்துள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், இன்றைய காலகட்டத்தில் கணவன்- மனைவி இருவருமே வேலைக்கு செல்வதாக உறவுக்காக நேரத்தை செலவிட முடியாமல் இருக்கிறது.
தாம்பத்திய உறவு என்பது தம்பதிகளின் உடல் மற்றும் உளவியல் ரீதியான மாற்றத்துக்கு மிக முக்கியமான ஒன்றாகும், இதனால் குடும்ப உறவுகளும் பலப்படும்.
ஆனால் இந்த சட்டம் இயற்றப்படாமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று நம்புகிறேன், இந்த சட்டம் அமலுக்கு வந்தபின்னர் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் மீது நம்பிக்கை கொண்டு விடுப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.