குத்துச்சண்டையில் மாஸ்டர் ஒப் ஸ்போர்ட் மற்றும் இளைஞர்கள் மற்றும் ஜூனியர்களில் உக்ரைனின் சாம்பியனான ஒலெக்சாண்டர் ஓனிஷ்செங்கோ, டொனெட்ஸ்க் ஒப்லாஸ்டில் உள்ள பக்முட் அருகே ரஷ்ய படைகளுடனான மோதலில் கொல்லப்பட்டார்.
“ஒலெக்சாண்டர் ஓனிஷ்செங்கோ குத்துச்சண்டையில் உக்ரைனின் விளையாட்டு மாஸ்டர், இளைஞர்கள் மற்றும் இளையவர்களிடையே உக்ரைனின் சாம்பியன், கார்பாத்தியன் கோப்பை, குசெல்னி கோப்பை மற்றும் அர்சியோனோவ் கோப்பை வென்றவர்.
தேசிய குத்துச்சண்டை அணியின் உறுப்பினர்
அத்துடன் உக்ரைனின் தேசிய குத்துச்சண்டை அணியின் உறுப்பினராகவும் இருந்தார்.
இந்நிலையில் உக்ரைன் படையில் இணைந்து போரில் ஈடுபட்ட அவர் பக்முட் அருகே கொல்லப்பட்டார். மே 24ஆம் திகதி அவரின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு குத்துச்சண்டை கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.