Loading...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
குறிதத சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
Loading...
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்
இதன்போது கிழக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...