Loading...
ஜப்பானிய வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் மிக விரைவில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய வாகன நிறுவன பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துடனுமான கலந்துரையாடலிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கையின் வாகன இறக்குமதியாளர்கள் இலங்கை அரசாங்க அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தும் இருந்தனர்.
Loading...
அந்தநிலையில் அண்மையில் கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவரும் சுதந்திர வர்த்தகம் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார்.
இதனால் மிக விரைவில் மீண்டும் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...