Loading...
வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் மீது கார் மோதியதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (25.05.2023) இரவு இரத்தினபுரி – பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பலாங்கொடையைச் சேர்ந்த 14 வயது சிறுவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
Loading...
விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார்
சிறுவனின் சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
காரின் சாரதியைக் கைது செய்த பலாங்கொடை பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...