மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் பன்றிகளுக்கு வைரஸ் நோய் பரவி வருவதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
பன்றிகளின் சுவாச மண்டலத்தில் ஏற்படும் இந்த வைரஸ் நோய் TRRS என்ற பெயரால் அறியப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் ஹேமலி கொத்தலாவல தெரிவிக்கையில்,
இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பன்றிகள் உயிரிழக்கும் நிலையில் நோய்க்கான தடுப்பூசிகளை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் அபாயம் இல்லை.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் அண்மையில் மாடுகளுக்கிடையே Lumpy skin disease எனப்படும் தோல் கழலை நோய் அடையாளம் காணப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் கால்நடைகள் Lumpy skin disease அறிகுறிகளுடன் காணப்படுவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளதுடன், நோய்த் தாக்கத்தினால் நூற்றுக்கும் அதிகமான மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோய் தொடர்பில் கால்நடை உற்பத்தி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குலராஜ் பெரேரா தெரிவிக்கையில்,
இதன்படி மேல் மாகாணம், யாழ்ப்பாணம், களுத்துறை, மாத்தளை, வஹாக்கோட்டை, கலேவெல போன்ற பல பிரதேசங்களில் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பன்றிகள் பதிவாகியுள்ளன.
கால்நடைகளுக்கு உரிமையாளர்கள் தடுப்பூசி செலுத்தாமையே இந்நோய் பரவுவதற்கு முக்கிய காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நுரையீரல் தொற்று காரணமாக இந்த பன்றிகள் நீரிழப்புக்குள்ளாகி கடுமையான நிமோனியா நோயினால் இறக்கின்றன. 2020 ஆம் ஆண்டு நாட்டில் முதன்முறையாக இந்நோய் பதிவாகியுள்ளதாகவும், தற்போதைய நிலைமை தொடர்பில் இதுவரையில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.