Loading...
பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறும் இலங்கையர்களை தடுப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தத் தகவலை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
Loading...
பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளரும் இந்திய பணிப்பாளருமான பென் மெல்லர் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆகியோர் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரானை சந்தித்தர். இதன்போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
Loading...