Loading...
முட்டையில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம். தோசை, சூடான சாதத்துடன் சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
Loading...
வேகவைத்த முட்டை – 3
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – சிறிதளவு
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
- தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். * அடுத்து இதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- அடுத்து தக்காளி சேர்த்து, பாதி வதங்கியதும், இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு, கரம் மசாலா தூள் போட்டு கிளறவும். * அடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கடாயை மூடி மிதமான தீயில், 10 நிமிடம் கொதிக்கவிடவும்/ * 10 நிமிடம் கழித்து, இதில் வேகவைத்த முட்டையை துருவி சேர்க்கவும். * நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி, குறைந்த தீயில் 3 நிமிடம் வேகவிடவும். * இப்போது சுவையான முட்டை கீமா தயார்.
Loading...