Loading...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் தலைவர்களுடன் ஆக்கபூர்வமான சந்திப்புகளில் ஈடுபட்டார்.
Loading...
பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவம் அவசியம் என்பதனால், ஜப்பான், சீனா, இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கு இடையே வெளிப்படையான உரையாடல் தேவை என்பதை வலியுறுத்தினார்.
இதன் பின்னர் ஜப்பானிய நிதியமைச்சருடன் பேச்சு நடத்திய ஜனாதிபதி, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் ஐ.எம்.எப். வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தார்.
Loading...