கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெனமுல்ல பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துரிகிரிய பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் 50 கிராம் 610 மில்லிகிராம் ஹெரோயின், 101 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 03 கிலோ 240 கிராம் கேரளா கஞ்சா மற்றும் 900 மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹேனமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய வயோதிப பெண் என தெரியவந்துள்ளது.
குறித்த பெண் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.