யாழ்ப்பாண மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலால் எச்1 என்1 வைரஸ் தொற்றால் 4 பேர் பீடிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்றால் வடக்கில் 11 பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான சந்தேகத்தில் இறுதியாக 6 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேருக்குப் பன்றிக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளமையை வைத்திய அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது என யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் க.நந்தகுமாரன் கூறியுள்ளார்.
இந்த நோய்த் தாக்கத்துக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளவர்கள் கோப்பாய் மற்றும் வேலணையைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.
அத்துடன், பன்றிக் காய்ச்சல் நோய்த் தொற்றுக்கான தடுப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இனங்காணப்பட்ட பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகின்றது.
மேலும், எச்1என்1 தாக்கத்தால் அதிகமாகச் சிறுவர்களும், கர்ப்பவதிகளுமே பாதிப்படையக் கூடும். வயோதிபர்களும் இதற்கு இலக்காகக்கூடும். இந்த நோய்த் தொற்றுக்குரிய வைத்திய வசதிகள் எம்மிடம் உள்ளன என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.