Loading...
அமைச்சின் செயலாளர் ஒருவர் ஓய்வு பெற்ற பின்னரும் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிடப்பட்ட சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது.
புதிய செயலாளரின் அனுமதியின்றி காணி பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்கள் இடம்பெற்றுள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
Loading...
மோசடிப் பணியகத்திற்கு முறையீடு
இது தொடர்பில், அமைச்சின் புதிய செயலாளர் சிரேஷ்ட அதிகாரிகளிடம் ஆலோசனைகளை கோரியிருந்த நிலையில், இந்த செயல்பாட்டில் சட்டவிரோத ஆதாயங்கள் இருக்கலாம் என்பதால் மோசடிப் பணியகத்திற்கு முறையிடுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணையில், ஆவணங்கள் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் என்ற தோற்றத்தை காட்டும் வகையில் திகதிகள் இடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...