கொழும்பில் மற்றுமொரு புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பதற்கான இரகசிய கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய கூட்டணி மூலம் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொது வேட்பாளர்
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவே இந்த பொது வேட்பாளராக இருக்க முடியும் என உத்தியோகபூர்வமற்ற வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
பல முக்கிய மதத் தலைவர்கள், பல சிறிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல சக்தி வாய்ந்த சமூக ஆர்வலர்கள் கொழும்பு 7 இல் அமைந்துள்ள பெரிய விகாரை ஒன்றில் இது தொடர்பாக பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இன்னும் ஒரு மாதத்தில் புதிய அரசியல் கூட்டணி அதிகாரபூர்வமாக தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு முன்னதாக நாட்டின் எரியும் பிரச்சினைகள் குறித்து தொடர் மாநாடுகளை நடத்த ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.