Loading...
கலவான – கொடிப்பிலிகந்த பிரதேசத்தில் பாடசாலை பதில் அதிபர் மற்றும் நடன ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் நேற்று மாலை பாடசாலையின் கழிவறையில் வைத்து இரு சிறுவர்களை கடுமையான பாலியல் வன்புணர்விற்கு உட்டுத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பெற்றோரால் முறைப்பாடு
12 வயதுடைய இரண்டு சிறுவர்களே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Loading...
இது தொடர்பில், பிள்ளைகள் பெற்றோருக்கு அறிவித்ததன் பிரகாரம், பிள்ளைகளுடன் வந்த பெற்றோர்கள் கலவானை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட பதில் அதிபரும், ஆசிரியரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Loading...