முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரிடமிருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான நீலக்கல் கொண்ட மோதிரம் திருடப்பட்டுள்ளதாக சமிந்த சிறிசேன முறைப்பாடு செய்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
பொலன்னறுவை அத்துமல்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து நீலக்கல் பதித்த மோதிரம் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் தீவிர விசாரணை
சமிந்த சிறிசேனவின் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வரும் பெலியத்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இந்த திருட்டைச் செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த மோதிரத்திற்கு மேலதிகமாக ஐம்பதாயிரம் அமெரிக்க டொலர்கள் மற்றும் ஒரு இலட்சம் ரூபா மதிப்பிலான இலங்கை நாணயங்களும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.