குழந்தைகளின் சருமம் மிக மென்மையானதாக இருக்கும். இந்த குழந்தைகளின் சருமத்தை பாதுகாப்பது மிக முக்கியம். காற்றில் உள்ள வெப்பநிலை மற்றம் வெயில் போன்ற காரணங்களால் வெப்பம் தாக்கி குழந்தையின் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை முற்றிலும் நீக்கிவிடுகின்றது.
இதனால் குழந்தையின் சருமம் உலர்ந்து தோல் உரிவது மற்றும் சிறு சிறு கொப்புளங்கள் மற்றும் புண்கள் தோன்றும். மென்மையான சருமத்தில் சொறி சிரங்கும் வந்து குழந்தைகள் அவதிப்படுவார்கள்.
இதற்கு எண்ணெய் மசாஜ் மிகவும் நல்லது. குழந்தைகளை மசாஜ் செய்ய நிறைய எண்ணெய்கள் உள்ளது. குழந்தைகளுக்கு ஏற்ற சரியான எண்ணெயை கொண்டு மசாஜ் செய்யவேண்டும்.
தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து விடலாம். இந்த எண்ணெய் பலராலும் பயன்படுத்தக் கூடியது தான் அதனால் கொஞ்சம் எடுத்து குழந்தைக்கு மசாஜ் செய்துவிடலாம். ஏற்கனவே கொப்புளங்கள் இருந்தால் அதையும் இந்த தேங்காய் எண்ணெய் சரியாக்கிவிடும். தேங்காய் எண்ணெய் புண்களை ஆற்றும் குணம் நிரம்பி உள்ளது இதனால் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் உடனே குணமாகிவிடும். குழந்தைகளும் அழகுடன் வளர்வர்.
மேலும் சிறிது விளக்கெண்ணெய் மற்றும் தாய்ப்பால் ஆகிய இரண்டையும் கலந்து குழந்தைக்கு ஊறு எண்ணெய் வைப்பார்கள் இந்த எண்ணெய் வைத்தவுடன் குழந்தை நன்றாக புஷ்டியாகும். விளக்கெண்ணெய் கொண்டு உடல் முழுவதும் தேய்த்துவிட்டு மசாஜ் செய்துவிடுவார்கள். இதனால் உடலில் உள்ள அனைத்து வெப்பமும் இறங்கிவிடும்.