இறக்குமதி செய்யப்படும் உலர் கருவாடு மற்றும் பழங்களில் கன உலோகங்கள் மற்றும் ஆர்சனிக் அளவுகளை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் பழங்களில் உள்ள ஈயத்தின் சதவீதத்தை சரிபார்க்கும் நடவடிக்கை ஜுன் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில உலர் பழங்கள், கருவாடு மற்றும் நெத்தலி போன்றவற்றில் அதிக அளவு கன உலோகங்கள் மற்றும் ஆர்சனிக் கலந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையே இதற்குக் காரணம் என சுகாதார அமைச்சின் சுற்றாடல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு சுகாதார பிரதி பணிப்பாளர் நாயகம் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு
மேலும், இறக்குமதி செய்யப்படும் சில பழங்களில் அதிக அளவில் ஈயம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021-2022 ஆம் ஆண்டுகளில் சுகாதார அமைச்சகத்தின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு நடத்திய தேசிய உணவுப் பாதுகாப்பு ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
இதனால் கருவாடு மற்றும் பழங்களில் கனரக உலோக ஆர்சனிக் மற்றும் ஈயம் போன்ற குறைந்தளவு நச்சுப் பொருட்கள் இல்லாத உணவுப் பொருட்களை மாத்திரமே இலங்கைக்கு இறக்குமதி செய்யுமாறு சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
அதற்கமைய, வர்த்தகர்கள் அல்லது நுகர்வோர் மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்காக விசேட தொலைபேசி இலக்கத்தையும் உணவு கட்டுப்பாட்டு பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த எண் 0112112718 ஆகும்.