Loading...
பிரதமர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தாய்லாந்து சென்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (புதன்கிழமை) காலை இவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நோக்கிப் சென்றுள்ளார்.
தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் அங்கு சென்றுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Loading...
இதன்போது பிரதமர் தினேஷ் குணவர்தன, தாய்லாந்து மன்னர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட இராஜதந்திரிகளையும் சந்திக்கவுள்ளார்.
குறித்த விஜயத்தில் பிரதமருடன் 11 பேர் கொண்ட தூதுக்குழு தாய்லாந்து நோக்கி பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,
Loading...