Loading...
சமகாலத்தில் இலங்கையில் கடன் அட்டைகளின் பயன்பாட்டில் படிப்படியாக சரிவு ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிக்கைக்கமைய, இந்த விடயம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள், இலங்கையில் செயல்பட்ட மொத்த கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,952,991 ஆக இருந்தது. 2023ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 1,942,272 அட்டைகளாகவும், பெப்ரவரி மாதத்தின் இறுதியில் 1,940,872 அட்டைகளாகவும், மார்ச் மாதத்தின் இறுதியில் 1,939,541 அட்டைகளாகவும் குறைந்துள்ளது.
Loading...
மார்ச் இறுதிக்குள், இந்த கடன் அட்டைகளின் நிலுவைத் தொகை 140,509 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 2022ஆம் ஆண்டு 143,098 மில்லியன் ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
Loading...