இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. போட்டியின் போது மழை குறுக்கிட்டதால், போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு நள்ளிரவில் மீண்டும் தொடங்கப்பட்டது.
டாடா ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதி போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின.
இந்த போட்டி மூலம் புதிய உலக சாதனை படைத்து இருப்பதாக ஜியோசினிமா தெரிவித்து உள்ளது. ஜியோசினிமா செயலியில் டாடா ஐபிஎல் 2023 இறுதி போட்டியை சுமார் 3.2 கோடி பேர் பார்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருக்கிறது. எனினும், இடையில் மழை குறுக்கிட்டதால், போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு நள்ளிரவில் மீண்டும் தொடங்கப்பட்டது.
நள்ளிரவு 1 மணி அளவிலும் ஐபிஎல் 2023 இறுதி போட்டியை சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்தனர். இதன் மூலம் ஜியோசினிமா, நேரலை பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை படைத்துள்ளது.
முன்னதாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற 2019 ஐசிசி உலக கோப்பை இறுதி போட்டியினை அதிகம் பேர் பார்த்தனர். கடந்த மே 23-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற குவாலிஃபயர் போட்டியினை 2.5 கோடி பேர் பார்வையிட்டது அதிகமாக இருந்தது. தற்போது நேற்றைய போட்டியில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டு இருக்கிறது.