கிளிநொச்சி உதயநகர் மேற்கில் வசித்துவரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தயாவதி கருணாமூர்த்தியின் மகனான கருணாமூர்த்தி தாருஷன் (வயது20) என்பவர்,
தனது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுச் செயலிழந்த நிலையில் வவுனியா வைத்தியசாலயைில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுச் செயலிழந்துள்ளமையினால் இளைஞனின் உயிரைக் காப்பாற்ற அவசரமாக ஒரு சிறுநீரகத்தையாவது மாற்றீடு செய்ய வேண்டும் எனவும், அதற்காக 30 இலட்சம் ரூபா பணம் தேவைப்படும் என வதை்தியர்களால் கூறப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனின் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருவதாகவும், இவரது குடும்பத்தில் இவரது தந்தை வன்னி யுத்தத்தில் அகப்பட்டு தனது வலது கையில் காயப்பட்டதுடன் வலது கை செயற்படாத நிலையில் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வரும் இக்குடும்பத்தில் தனது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடி வரும் தாருஷனை உங்களது குடும்பத்தின் ஒரு உறவாகக் கருதி இவரது உயிரைக் காப்பாற்ற விரைந்து உதவுமாறு அவரது தாயார் கேட்டு கொண்டுள்ளார்.
மேலும், மனித உள்ளவர்களிடமிருந்து உதவியை எதிர்பார்த்துப் பணிவாக வேண்டி நிற்கின்றார்.
தங்களது உதவிகளை வழங்குவதற்கான தொலைபேசி இலக்கம் க.தயாவதி +94775785173 மற்றும் வங்கிக் கணக்கு இல 8155007744 (கொமர்ஷல் வங்கி) ஆகிய வழிகளில் மூலம் உதவிகளை வழங்க முடியும் என கூறப்படுகின்றது.
மேலதிக, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது தொலைபேசி இல. +94776913244 உடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும் என்பதுடன், இளைஞனின் வைத்தியசாலை சான்றிதழ், கிராம சேவையாளர், பிரதேச செயலகம் என்பவற்றால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.