வாயுத்தொல்லை மற்றும் வயிற்று வலி என்பது தற்போது மக்களிடம் நிலவி வரும் ஒரு பெரிய பிரச்சினையாகும்.
இந்த பிரச்சினைக்கு பல்வேறு தீர்வுகள் இருந்தாலும், இயற்கையான ஒரு முறையை கண்டுப்பிடிப்பதே ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
முதலில் வயிற்றில் வாயு உருவாவதற்காக காரணம் பற்றி தெரிந்துக்கொள்வோம். காலையில் வெறும் வயிற்றில் டீ குடித்தால் வாயு பிரச்சினைகள் ஏற்படும்.
வாயு தொல்லை
அடிக்கடி உணவை விரைவாக சாப்பிட முயற்சிப்பதால் செரிமான பிரச்சினைகள் ஏற்பட்டு, அது வாயுப்பிரச்சினையாக மாறுகின்றது.
லாக்டோஸ் கொண்ட பால் அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிட்டால் வாயு தொல்லை ஏற்படும். வாயை அதிகமாக திறந்து உணவை உட்கொண்டால் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
உணவை ஜீரணிக்க முடியவில்லை என்றாலும் இந்த பிரச்சினை ஏற்படுக்கூடும். இது வருவதை எப்படி தடுக்கலாம் என்று பார்ப்போம்.
- பெருஞ்சீரகத்தை தண்ணீரில் இட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் வடிக்கட்டி தினமும் குடிக்க வேண்டும்.
- அதிக எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
- புதினா நீரை குடித்து அதன் இலைகளை சாப்பிடுவது கோடை காலத்தில் நன்மையளிக்கும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதனுடன் இஞ்சி சேர்த்து அதை குடித்து வந்தால் நல்லது.
- நடைபயிற்சி மேற்கொண்டால் வயிற்றில் இருந்து வாயு வெளியேறும்.