திருகோணமலை -எத்தாபெந்திவெவ பகுதியில் திருமண வீடொன்றில் இடம்பெற்ற கைகலப்பில் நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருமண வீட்டில் விருந்துபசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவருக்கு பியர் போத்தலினால் மற்றுமொரு இளைஞர் தாக்கியுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதன்போது இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் தாயும் மகனும் காயமடைந்துள்ளதுடன் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான ஆர்.ஏ.சீ.பீ.ரணசிங்க (35வயது) ஏ.ஆர்.தேதுனு (20வயது) மற்றும் எஸ்.எஸ்.ஹேமச்சந்ரா (59வயது) அவருடைய மகன் டி.என்.எஸ்.விஜயகோன் (25வயது) எனவும் தெரிய வருகிறது.
குறித்த மோதல் தொடர்பில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.