Loading...
ஒருநாள் சேவையின் கீழ், இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றையதினம் பத்தரமுல்லை பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.
Loading...
பலர் கைது
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் சட்டவிரோதமாக பணத்தை பெற்றுக்கொண்டு சிலர் கடவுச்சீட்டுக்களை வழங்கி வரும் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 19 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், ஒருநாள் சேவையின் கீழ் இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஹர்ச இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
Loading...