வெளிநாட்டில் வசிப்பவரின் வாகனத்தை மோசடியான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 10,000 ரூபா அபராதமும் விதித்துள்ளார்.
வீட்டிலிருந்து வாகனத்தை திருடி
01 ஜனவரி 2010 மற்றும் 01 ஜூன் 2008 க்கு இடையில், குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் காணி மற்றும் வீடொன்றிற்கான போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்ததாகவும், அந்த வீட்டிலிருந்து வாகனத்தை திருடி வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
நீதிபதி அளித்த தீர்ப்பு
விசாரணைக்குப் பின்னர், போலிச் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து பிரதிவாதியை விடுவித்தும், திருடப்பட்ட வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் பிரதிவாதி குற்றவாளி என்றும் நீதிபதி தீர்ப்பை அறிவித்தார்.
போலி ஆவணங்களைத் தயாரித்த புலத்சிங்கேவைச் சேர்ந்த குணசிங்கவிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொள்ளாதது குறித்து ஆச்சரியமடைந்த நீதிபதி, காவல்துறையின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் வருந்துவதாகவும் தெரிவித்தார்.