Loading...
வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் தொடருமானால் இந்தியாவில் உள்ள இந்து மத அமைப்புகளின் ஆதரவை கோருவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவில் உள்ள பல இந்து அமைப்புகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பிரத்தியேகமாக தெரிவித்துள்ளார்.
Loading...
எவ்வாறாயினும் இந்திய இந்து அமைப்புகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்தாலும் இறுதித் திட்டம் இன்னும் வகுக்கப்படவில்லை என்றும் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியாவின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டியதன் அவசியம் குறித்து முன்னதாக அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...