Loading...
இவ்வருடத்திற்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சனத்தொகை கணக்கெடுப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள இதுவரை வீடுகளுக்கு வரவில்லையென்றால், அதுபற்றி தெரிவிக்குமாறு இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Loading...
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளது.
எவ்வாறாயினும், கிராம உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அன்றைய தினம் முடிக்க முடியாது என அதன் தலைவர் கமல் கித்சிறி தெரிவித்துள்ளார்.
Loading...