அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அவசர ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை உறுப்பினர்கள், அரசாங்கக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களை கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்காகவும் அது முழுமையான தேர்தல் தயார்படுத்தலாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதகமான நிலையில் இருந்த நாட்டின் பொருளாதாரம் தற்போது பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் அதனை வளர்ச்சி மட்டத்திற்கு கொண்டு வருமாறும் அமைச்சரவை மற்றும் அமைச்சர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் மக்கள் மத்தியில் சென்று அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
கிராமத்திற்குச் சென்று எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கான பின்னணியை தயார் செய்யுமாறும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.