காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அவசர அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் (02.06.2023) பல இடங்களில் திடீரென ஏற்பட்ட இடி,மின்னல் வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Important Notification Department Of Examinations
படகு சேவை
இருப்பினும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஏனைய குழுக்களுடன் இணைந்து பரீட்சார்த்திகளை படகுகள் மூலம் பரீட்சை நிலையங்களுக்கு பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், திங்கட்கிழமைக்குள் மழையுடனான காலநிலை குறையும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.