Loading...
சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஒரு இடம் சரிந்து 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 5-வது இடத்தில் நீடிக்கிறார். சமீபத்தில் சையத் மோடி கோப்பையை கைப்பற்றிய இந்திய வீரர் சமீர் வர்மா 10 இடங்கள் முன்னேறி தனது சிறந்த நிலையாக 23-வது இடத்தை பிடித்துள்ளார்.
Loading...
அஜய் ஜெயராம் 19-வது இடத்திலும், பிரனாய் 21-வது இடத்திலும் உள்ளனர்.
Loading...