எரிவாயு விலை குறைப்பிற்கு இணையாக உணவப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கான முறைமை ஒன்றை முன்வைக்குமாறு அகில இலங்கை சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல் வெளியிட வேண்டும்
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர், இந்த விடயத்தில் அரசாங்கம் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபை உரிய முறைமைகளைக் கொண்டுவர வேண்டும். தேநீர் கோப்பையின் விலை, 30 ரூபா என அறிவித்து, வர்த்தமானி அறிவித்தல் வெளியிட வேண்டும்.
அவ்வாறு செய்தால், இலங்கையில் உள்ள சிற்றுணவகங்களில், தேநீர் கோப்பையை 30 ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.